ஒருவாரம் முன்னதாக ஏப்-22ல் வெளியாகும் ‘வெற்றிவேல்’..!

253

Vetrivel Movie Stills (13)

‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள படம் ‘வெற்றிவேல்’.. கமர்ஷியல் பார்முலாவில் இருந்து விலகாமல் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி உருவாகியுள்ள இந்தப்படத்தை வசந்தமணி என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சசிகுமார் ஜோடியாக மியா ஜார்ஜ், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.. லைக்கா நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடுகிறது.

இந்தப்படத்தை ஏப்-29ல் தான் ரிலீஸ் செய்வதாகத்தான் முதலில் அறிவித்திருந்தனர்.. காரணம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய்யின் ‘தெறி’ வெளியாவதால் அதன் தாக்கம் குறைய 15 நாட்களாகும் அதன்பின் ரிலீஸ் செய்வதுதான் சரியாக இருக்கும் என கருதித்தான் இந்த இடைவெளி விட்டார்கள்..

ஆனால் ‘தெறி’ படத்தின் தற்போதைய தியேட்டர் நிலவரங்களை கவனித்து பார்த்த லைக்கா நிறுவனம், ‘வெற்றிவேல்’ படத்தை ஒருவாரம் முன்னதாக அதாவது வரும் 22ஆம் தேதியே வெளியிடுவதற்கு தோதான சூழலும் போதிய தியேட்டர்களும் இருப்பதை உணர்ந்து ஒரு வாரம் முன்கூட்டியே வெளியிடும் வேலைகளை செய்து வருகிறது.

Comments are closed.