மூன்று ‘10’களை ஒன்றிணைத்த வெள்ளைக்காரன்..!

204

Velainu-Vandhutta-Vellaikaaran
இயக்குனர் எழில் டைரக்சனில் விஷ்ணு நடித்துள்ள படம் தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சூரி மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.. இசையமைப்பாளர் சத்யா இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தபோது அதில் ஓர் ஆச்சர்யமான உண்மை வெளிப்பட்டது.

அதாவது 1999ல் சினிமாவில் அடியெடுத்து வைத்த எழில், 2009ல் சினிமாவுக்குள் நுழைந்த விஷ்ணு, இசையமைப்பார் சத்யா மூவருக்குமே இதுதான் அவர்களது 10ஆவது படமாம். இந்த நிகழ்வில் பேசிய விஷ்ணு, “நீர்ப்பறவை படத்திற்கு பின் நான் படங்களை தேர்வுசெய்து தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன். இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான்” என்றார்.

Comments are closed.