இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடிக்கும் ‘வீரையன்’..!

197

மன்னர்கள் வாழ்ந்த தஞ்சை பூமியில் இன்று மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாக இருக்கும் படம் தான் ‘வீரையன்’. கதாநாயகனாக நடிப்பவர் சுந்தரபாண்டியன், ரம்மி படங்களில் நடித்த இனிகோ பிரபாகர். எஸ்.பரித் என்பவர் படத்தை இயக்குகிறார். ‘கோலிசோடா’ புகழ் அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் பூஜையையே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் வைத்து நடத்தியிருக்கிறார்கள். விவசாயத்தையே உயிர்மூச்சாக கொண்டு வாந்த மக்கள் இன்று வெளிநாட்டில் வேலைசெய்யும் அவலம் ஏன் வந்தது என்பதை காரண காரியங்களுடன் விளக்கும் படமாக இது உருவாக இருக்கிறதாம்.

Comments are closed.