அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் ‘வட்டகரா என்கிற படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார்.
எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது…
இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சதீஸ் மற்றும் சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய்,,,முக்கிய கதாப்பாத்திரத்திலும் மேலும் இவர்களுடன் பவர் ஸ்டார், சம்பத் ராம், கெகராஜ், தெய்வமே சிவாஜி, போராளி புகழ் திலிபன், பெஞ்சமின் ஆகியோர்களும் நடிக்கின்றனர்.. படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்கிறார்.

Comments are closed.