‘மாரி-2’வில் இணைந்தார் வரலட்சுமி..!

286

varalaksmi in maari 2

கடந்த 2015ஆம் வருடம் பாலாஜி மோகன் டைரக்சனில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி’.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘மாரி-2’ என்கிற பெயரில் தயாராகிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி சமீபத்தில் தான் ஒப்பந்தமானார்.

இதை தொடர்ந்து தற்போது இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிகை வரலட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன்தினம் தான் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவும் தனுஷுடன் பத்து வருடம் கழித்து இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.