காற்று புகாத இடத்திலும் கல்வியை புகுத்துவோம்.. இந்தியாவை கல்வியுள்ள தேசமாக்குவோம் என்கிற கருத்தை மையமாக வைத்து தான் ‘வஜ்ரம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.. இந்தப்படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ரமேஷ் செல்வன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சென்சார் போர்டு ஆட்சேபம் தெரிவித்த இந்தப்படத்தின் சில காட்சிகளை ரீ-சூட் செய்து, படத்திற்கு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.. படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comments are closed.