மறுமணம் செய்துகொண்டார் ஊர்வசி..!

106

காமெடி, குணச்சித்திரம் என இரண்டு ஏரியாவிலும் கலக்குபவர் நடிகை ஊர்வசி. 85-95களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த இவரும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்தும் பெற்றனர்.

தற்போது ஊர்வசி இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பே இந்த திருமணம் நடந்திருந்தாலும் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது தான் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளார் ஊர்வசி.

அவர் தற்போது திருமணம் செய்துள்ளது சிவபிரசாத் என்கிற கட்டட காண்ட்ராக்டரைத்தான். இவர் ஊர்வசியின் சகோதரரின் நண்பர் ஆவார். ஊர்வசியின் முன்னாள் கணவரான மனோஜ் கே.ஜெயன் ஏற்கனவே மறுமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.