விறுவிறுப்பாக துவங்கிய உதயநிதி – கௌரவ் பட டப்பிங்..!

238

udhayanithi film in Dubbing

எழில் டைரக்சனில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் வரும் வெள்ளி (மே-12) அன்று ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் தூங்கா நகரம், சிகரம் தொடு படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மற்றுமொரு பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பும் கூட முடிவடைந்து விட்டது..

இப்போது அந்தப்படத்தின் டப்பிங் பணியில் வேகம் காட்டி வருகிறார் உதயநிதி.. இந்தப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

Comments are closed.