
பொதுவாக முன்னணி ஹீரோக்கள் போலீஸ் அதிகாரிகளாக நடித்த படங்களை பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது அவரது ரசிகர்களுக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறிக்கொள்ளும். யாராவது தப்பு செய்தால் இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தலாம் என தோன்றும்..
சாதாரண ரசிகனுக்கு இது ஒகே. ஆனால் போலீஸ்காரர்கள் இதுபோன்ற தீவிர ரசிகர்களாக இருந்துவிட்டால்..? இப்படித்தான் ஆக்ராவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சினிமாவில் வரும் தங்களது அபிமான நடிகர்கள் போலீஸ் வேடத்தில் நடித்த படங்களை பார்த்து அதே போல உடையணிந்து பணிக்கு வந்தது அவர்களுக்கு சஸ்பென்ஷனை வாங்கி கொடுத்துள்ளது.
ஆக்ராவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இரண்டு போலீஸார்கள் தங்களது காக்கி சீருடையையே சினிமா பாணியில் தங்களுக்கு பிடித்தமான வேறுவிதமான காக்கி கலர்களில் அணிந்திருந்தார்களாம். அதுவும் தவிர மிக முக்கியமான ஒன்றான தொப்பியை வேறு அணிந்திருக்கவில்லையாம்..
இதில் ஒருவர் ‘சிங்கம்’ படத்தில் அஜய் தேவ்கன் அணிந்திருப்பது போலவும் மற்றவர் ‘தபாங்’ படத்தில் சல்மான் கான் அணிந்திருப்பதுபோலவும் போலீஸ் யூனிபார்மையே ஸ்டைலாக அணிந்து இருந்தனராம். அப்போது திடீரென அங்கு விசிட் வந்த ஐ.ஜியிடம் வசமாக சிக்க, அவர், “சிங்கம்’, ‘தபாங்’ படத்தில் வருவதுபோல உடையணிவதைவிட்டுவிட்டு சீருடையை ஒழுங்காக அணியுங்கள் என்று எச்சரிதாரம். அப்புறம் என்ன.., இருவருக்கும் பின்னாடியே சஸ்பென்ஷன் ஆர்டரும் தொடர்ந்து வந்ததாம்.
Comments are closed.