அஜித் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்.. எந்த பாலிடிக்ஸிலும் சிக்காதவர்.. அப்படிப்பட்டவருக்கு எதிராக திரும்பக்கூடிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன.? அதுவும் இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் என கேட்கவே ஷாக்காக இருக்கிறதே என குழம்ப வேண்டாம். இந்த மூணுபேரும் கௌதம் மேனன் இயக்குற அஜித்தோட 55வது படத்துல வில்லன்களா நடிக்கிறவங்க தான்.
ஆமா.. அருண்விஜய், ஆதி ரெண்டுபேரும் வில்லன்களா நடிக்கிறாங்கன்னு தெரியும்.. ஆனா யாருப்பா வில்லியா நடிக்கிற அந்த ஹீரோயின்னு கேட்குறீங்களா..? வேற யாரு.. பரதேசில அதர்வாவை விளக்குமாறால அடிச்சு விரட்டுனாருல்ல தன்ஷிகா தான் அவர்.
இப்போ கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முழுவீச்சில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். ஹீரோக்கள், ஹீரோயின்களெல்லாம் அஜித்துக்கு எதிராக களம் இறங்கியிருக்கிறதால படத்துக்கே ஒரு புது கலர் கிடைச்சிருக்குங்க.
Comments are closed.