தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்கமுடியாத பட வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று தான் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். சமீப வருடங்களாக பட தயாரிப்பிலும் இணைந்துள்ளார்கள். இதன் நிறுவனர் ரவீந்திரனும் அவரது நண்பர் லத்தீப்-ம் ஆரம்பத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்து இன்று இந்த அளவுக்கு வளர்ந்து திரையுலகில் வெற்றிகரமாக 25வது ஆண்டு என்கிற மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.
கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த நிறுவனம் சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் மூலம் முதன் முதலாக தயாரிப்பிலும் கால் வைத்தனர். அதன் பின் சிவலிங்கா படத்தை தயாரித்தனர். மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம்-2, அறம், ராட்சசன் என இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரித்துள்ளனர்.
தற்போது மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு-2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிச்சுகிட்டு இருக்கோம். இது மட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம் என்கிறார் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்.
25 வருடமாக விநியோகம், தயாரிப்பு என சினிமாவில் வெற்றிக் கொடி கட்டிவரும் ரவீந்திரன், தற்போது அடுத்த தலைமுறையாக தனது சௌந்தர்யா ரவீந்திரனையும் இந்த துறையில் தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை கவனிப்பதற்காக களமிறக்கி உள்ளார்..

Comments are closed.