பல்வலிக்கு ஹீரோயினை வைத்தியம் பார்க்க சொன்ன பேய்…!

192

தமிழ்சினிமாவில் தொடர்ச்சியாக பேய்ப்படங்கள் தான் வூடு கட்டி அடித்து வருகின்றனவே.. அந்தவரிசையில் அடுத்த பேயும் ‘ஜின்’ படம் மூலம் நம்மை கதிகலக்க வருகிறது. ‘மெட்ராஸ்’ கலையரசன் மற்றும் ரமீஸ்ராஜா கதாநாயகர்களாக நடிக்கும் இந்தப்படத்தில் மாயா என்கிற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஒரு பல் டாக்டர் என்றாலும் சினிமா மீதுள்ள விருப்பத்தால் நடிகையாக மாறிவிட்டார்.

அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் நாற்பது நாட்கள் ஷூட்டிங்கும் நடந்ததாம். படம் பேய்ப்படம் என்பதாலோ என்னவோ ஒருநாள் திகிலான அனுபவத்தையும் சந்தித்தாராம் டாக்டர் மாயா.. ஒருநாள் நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்த போது ஒரு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாம். தயக்கத்துடன் எடுத்தால், நடுங்கும் குரலில் ஒரு பெண். தனக்கு பல் வலி , வைத்தியம் பாப்பிங்களா என்று கேட்டதாம்.

இதற்கப்புறம் தான் இருக்கு ட்விஸ்ட்டே.. அந்த பெண்ணிடம். என்ன பிரச்சனை என மாயா கேட்க, “நான் ரத்த காட்டேரி , எனக்கு பல் வலி . இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரிக்க ஆரம்பித்ததாம்.. பயத்தில் மாயா கத்திவிட, யூனிட்டே திரும்பி பார்த்ததாம்.

அதன்பின் பயத்தால் அவருக்கு காய்ச்சலே வந்து விட்டதாம்.. தான் பல் டாக்டர் என்று தெரிந்த யாரோதான் விளையாட்டுக்கு செய்து இருப்பார்கள் என்பது புரிந்தாலும் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது என்கிற மாயாவுக்கு அதை செய்தது யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். இனிமேலாவது சொல்கிறார்களா பார்ப்போம் என காத்திருக்கிறார்.

Comments are closed.