தூய்மையை வலியுறுத்தும் படத்திற்கு தடைபோட்ட சென்சார்..!

192

thupparivu

ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் ‘துப்பறிவு’ 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இயக்குநர் தமிழ் ஆப்தன் என்கிற தினேஷ் இயக்கத்தில் இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றிபெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம்.

இதன் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இதன் தமிழ் ஆல்பத்தையும் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இதன் இந்தி ஆல்பத்தையும் வெளியிட்டார்.

இந்த ஆவணப்பட இயக்குநர் தமிழ் ஆப்தன் என்கிற தினேஷ் பேசும்போது “இது தூய்மையாக இருப்பதை வலியுறுத்தவே எடுக்கப்பட்டது. ஒரு நாடு சுத்தமாக இருக்க அரசு முயன்றால் மட்டும் போதாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் எல்லாம் மக்கள் போட்டது தான். மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஆனால் தணிக்கையில் சான்றிதழ் தரத் தயங்குகிறார்கள். தராமல் ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார்கள். ஆறு ரிவ்யூ ஆகி விட்டது. இன்னமும் சான்றிதழ் தரவில்லை. போராடிச் சோர்வு அடைந்து விட்டோம். கேள்வி கேட்டால் அரசை எதிர்ப்பதாக தவறாக நினைக்கிறார்கள். பிரச்சினை என்று இருந்தால் கேள்வி வரத்தான் செய்யும். ஒரு படைப்பு கேள்வி கேட்டால் அரசு விரோதமா? கேள்வி கேட்டாலே பயப்படுவது ஏன்? போராடிப் பார்த்து விட்டு இன்று மாலை ஆன்லைனில் வெளியிடுகிறோம்.” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
Attachments area

Comments are closed.