‘தோழா’வுக்கு ‘U’ சான்றிதழ்..! மார்ச்-25ல் ரிலீஸ்..!

219

Thozha-Movie-Still

தமிழ், தெலுங்கு இருமொழிப்படம், இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்துள்ள படம் அதிலும் கார்த்தி-நாகார்ஜுனா என்கிற இரண்டு மொழி திரையுலக சூப்பர் நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் என்கிற பெருமைகளுடன் உருவாகியுள்ள, ‘தோழா’ படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது.. வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளார் தமன்னா..

பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடைந்து தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் மார்ச்-25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Comments are closed.