
நாளை மறுநாள் (மார்ச்-25) கார்த்தி-நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள ‘தோழா’ படம் மிக பிரமாண்டமாக ரிலீஸாகிறது. வம்சி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தமிழ், தெலுங்கு (ஊபிரி) என இரு மொழிப்படமாக இது உருவாகியுள்ளது.. சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப்படத்தின் யு.எஸ்.ஏ.தியேட்டர் லிஸ்ட் நம்மை மலைக்க வைக்கிறது.
யு.எஸ்.ஏவில் உள்ள 34 மாகாணங்களில் சுமார் 96 நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. இதில் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் மட்டும் தலா 11 நகரங்களில் வெளியாகிறது. கார்த்தியின் படம் யு.எஸ்.ஏவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதன்முறை..
Comments are closed.