‘திரி’ கொளுத்த தயாராகும் அஸ்வின்-ஸ்வாதி..!

231

thiri audio launch
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஏற்கனவே நாம் பார்த்து ரசித்த ஜோடி தான் அஸ்வின்-ஸ்வாதி ஜோடி.. இந்த ஜோடி மீண்டும் ‘திரி’ என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.. அசோக் அமிரதராஜ் என்கிற புதியவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமலேயே இந்தப்படத்தை இயக்கியுள்ளாராம்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினரின் பேச்சுக்களில் இருந்து கவனித்தால், இது உற்சாகத்துள்ளலுடன் கூடிய கிராமத்து பின்னணியை கொண்ட படமாக உருவாகியுள்ளது என்றே தெரிகிறது.. ஜெயபிரகாஷ், ஏ.எல்.அழகப்பன், சென்றாயன், ‘சின்ன சுமார் மூஞ்சி குமாரு’ டேனியல், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

Comments are closed.