“சூர்யாவுக்கு காயம் எதுவும் இல்லை.. வதந்தியை நம்பாதீர்” – தனஞ்செயன் !

166

கோவாவில் விறுவிறுப்பாக நடந்துவரும் ‘அஞ்சான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் மிகப்பெரிய காயம் எல்லாம் இல்லை. சிறிய சிராய்ப்புகள் மட்டும்தான்.. சூர்யா நன்றாகவே இருக்கிறார்.

இன்று பூசணி உடைக்கிறது ‘அஞ்சான்’ டீம். ஆம். இன்றுடன் ‘அஞ்சான்’ படத்தின் க்ளைமாக்ஸ் உட்பட படத்தின் வசனப்பகுதிக்கான படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதுதவிர ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் தான் எடுக்கப்படவேண்டி இருக்கிறது. அதை ஜூன் மாதம் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

லிங்குசாமி, சூர்யா, சமந்தா என கம்பீரமான புது கூட்டணிக்கு மரியம் சகாரியா, சித்ரங்கதா சிங் கவர்ச்சியால் வலு சேர்க்க காமெடிக்கு கைகோர்க்கிறார் விவேக். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரசிகர்களுக்கு புதுவிதமான விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.

Comments are closed.