ஒருநாளைக்கு 15 முறை முகம் கழுவிய ‘தீரன்’ வில்லன்..!

105

abhimanyu singh

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். ஏற்கனவே வேலாயுதம், தலைவா படங்களில் இவரை பார்த்திருந்தாலும் தீரன் படத்தில் இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை.

“இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் தான் உடனே ஒப்புக்கொண்டேன்” என்கிறார் அபிமன்யு சிங்.

படத்தில் இவரது தோற்றத்தை பார்த்திருப்ப்பீர்கள் தானே.. மேக்கப் பாதி, ராஜஸ்தானின் புழுதி பாதி என ஆளே கொள்ளைக்கார தலைவனாக மாறிப்போயிருப்பார். “நாங்கள் வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் கால நிலையில் படபிடிப்பு நடத்தவேண்டி இருந்தது. நான் படபிடிப்பு முடிந்து ஒரு நாளைக்கு 15 முறை என் முகத்தை கழுவ வேண்டும். அங்கே அவ்வளவு தூசி படலம் இருக்கும். இப்போது படத்தின் வெற்றி எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துள்ளது” என்கிறார் அபிமன்யு சிங்.​

Comments are closed.