
2௦௦6ஆம் வருடத்தில் இருந்து தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கும் என அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது தமிழக அரசு. ஆனால் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டாலும் கூட 3௦ சதவீத கேளிக்கை வரியை குறைத்துக்கொண்டு எந்த தியேட்டரும் கட்டணம் வசூலிப்பது இல்லை என்பதுதான் உண்மை.
இதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரிவிலக்கின் பயன் மக்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அடுத்து வரும் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட துரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து இதனை அமல்படுத்தவேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
Comments are closed.