தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தனர் பிரசன்னா – சினேகா தம்பதி..!

136

காதல் திருமணம் செய்துகொண்ட நட்சத்திர தம்பதியான பிரசன்னாவும் சினேகாவும் திருமணத்திற்கு பின்னும் சினிமாவில் நடித்து வருகின்றனர். அதேநேரம் நாமே தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏன் நல்ல படங்களை தயாரிக்கக்கூடாது என்கிற எண்ணமும் நீண்ட நாட்களாகவே இவர்கள் இருவரின் மனதிலும் இருந்து வந்தது.

தற்போது அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக ‘கேம் சேஞ்சர் எண்டெர்டெயின்மெண்ட்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர் இந்த நட்சத்திர தம்பதியினர். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய லட்சுமிராமு என்பவருக்கு கிடைத்திருக்கிறது. மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Comments are closed.