‘நீட்’ தேர்வுக்கெதிராக ஒன்றாக போராட வேண்டும் ; தங்கர் பச்சான் வேண்டுகோள்…!

202

நீட் தேர்வால் வரும் காலத்தில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட கூடாதென்றால் தனித்தனியாக போராட்டம் நடத்துவது பலனளிக்காது.. னைத்து கட்சிகளும் மக்களூம் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான தங்கர் பச்சான். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்தத் திட்டங்களில் ஒன்று தான் “நீட்” தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்திற்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும். இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரளவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார் தங்கர் பச்சான்.

Comments are closed.