
சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 88வது படமாக உருவாகும் படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் பட டைட்டிலான ‘தனிக்காட்டு ராஜா’ என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்திற்கு அந்த டைட்டில் கிடையாது என தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது..
‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கம் இந்த பெயரிடப்படாத படத்தில் ஆர்யா, கேத்தரின் தெரசா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 10ஆம் தேதி திண்டுக்கல் அருகே உள்ள தாண்டிக்குடி என்ற மலை கிராமத்தில் துவங்க இருக்கிறது. இதற்காக அந்த கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்களாம்.
Comments are closed.