
கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை அள்ளிய படம் தனி ஒருவன்.. மோகன்ராஜா முதன்முறையா ரீமேக் என்கிற பாதையில் இருந்து விலகி தந்து மொத்த உழைப்பையும் கொட்டி இன்தபடத்தை உருவாக்கி இருந்தார். கதாநாயகன் ஜெயம் ரவியும் விளான் அரவிந்த்சாமியும் சம பங்களிப்பை தந்து இந்தப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றார்கள்.
தற்போது இந்தப்படத்திற்கு இன்னும் ஒரு கெளரவம் கிடைத்துள்ளது.. கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த IIFA உத்சவம் விருது வழங்கும் விழாவில் ‘தனி ஒருவன் மூன்று விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர், ஹீரோ, வில்லன் ஆகிய விருதுகள் முறையே மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
Comments are closed.