‘தங்கமகன்’ ; மீண்டும் ரஜினி டைட்டிலை வைத்தார் தனுஷ்..!

220

கடந்த வருடம் வெளியான படங்களில் சூப்பர்ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்த படங்களில் தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’யும் ஒன்று.. தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் வேல்ராஜ்-தனுஷ்-அனிருத் காம்பினேஷனில் அடுத்த படத்தை ஆரம்பித்து அதற்கு தற்காலிகமாக வி.ஐ.பி-2 என டைட்டிலும் வைத்து படத்தை முடித்துவிட்டனர்.

தற்போது இந்தப்படத்திற்கு ‘தங்கமகன்’ என பெயர்சூட்டி இன்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தனுஷ். பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என இதுவரை ரஜினியின் மூன்று பட டைட்டில்களை உபயோகப்படுத்திய தனுஷ், இப்போது தனது மாமனாரின் பட டைட்டிலை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார். தனுஷ் ஜோடியாக சமந்தா நடிக்கும் இந்தப்படத்தில் கே.எஸ்.ரவிகுமார், ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

Comments are closed.