பத்திரிகையாளர் உருவாக்கியுள்ள ‘தக்கன பிழைக்கும்’ குறும்படம்..!

199

அவ்வப்போது பத்திரிகையுலகில் இருந்து சிலர் இயக்குனர்களாக உருவெடுத்து ‘அட’ என ஆச்சர்யப்படுத்துவார்கள்.. அந்த வகையில் விகடனில் தலைமை நிருபராய் பணிபுரிந்துவிட்டு தற்போது குமுதம் இதழில் முதன்மை நிருபராய் பணிபுரியும் க.ராஜீவ் காந்தி திரை உலகை நோக்கிய முதல் முயற்சியாக ‘தக்கன பிழைக்கும்’ என்கிற ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.. இவர் விகடன் பட்டறையில் இருந்து வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் குறும்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவிருக்கிறது. “பத்திரிகையாளனாக பணிபுரிந்த அனுபவங்களில் என்னைச் சுற்றியே ஏராளமான கதைகளை உணர்ந்துள்ளேன். எனவே என் படைப்புகள் அனைத்திலுமே ஏதோ ஒரு உண்மைச் சம்பவமோ, சம்பவங்களோ தான் மையமாக இருக்கும். ‘தக்கன பிழைக்கும்’ குறும்படமும் அப்படிப்பட்ட முக்கிய அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை தான்’’ என்கிறார் பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி.

Comments are closed.