ஒரு பெண் தனியே பயணம் செய்கிறபோது அவளை இந்தச் சமுதாயம் எப்படிப் பார்க்கிறது அதனால் அவள் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள் என்பதைப் பற்றிய கதையே ‘தகவல்’ என்கிற படமாக உருவாகியுள்ளது. காணாமல் போன காதலனைத் தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் பாதையும் பயணமுமே கதையின் உட்கரு.
பிரபல மலையாள இயக்குனர்களான பரதன், ஜோஷி போன்றவர்களிடம் பணிபுரிந்த கே.சசீந்தரா என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, மலையாளத்தில் ‘வைடூர்யம்’ என்கிற படத்தை இயக்கி பத்திரிகைகளின் பரவலான பாராட்டைப் பெற்றவர்.. இந்தப்படம் ‘ஆரி 435’ கேமராவால் பிலிமில் எடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக இதுதான் பிலிமில் எடுக்கப்பட்ட கடைசிப் படமாக இருக்கும்.
தேஷா, ரிஷி, மயில்சாமி, டிம்பிள்ரோஸ், ஸ்ரீஷா, மாஸ்டர் விஷ்ணு நடித்துள்ள இந்தப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார்.. தனியே பயணம் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் இப்படம் யோசிக்க வைக்கும். இந்த சமூகத்தின் மீது கேள்விகள் கேட்க வைக்கும்” என்கிறார் இயக்குனர் கே.சசீந்தரா.
Comments are closed.