தமிழகத்தின் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் தனது நகைச்சுவையால் மகிழ்வித்தவர் நாகேஷ். தற்போது அவரது பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ‘கல்கண்டு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார்.
‘ராட்டினம்’ என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது. ஏ.எம்.நந்தகுமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கண்ணன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
பி.வாசு, கே.பாக்யராஜ், டி..ராஜேந்தர், எஸ்.பி.முத்துராமன், கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் செந்தில், மனோபாலா, மயில்சாமி, கஞ்சாகருப்பு உட்பட பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். டி.ராஜேந்தர் பேசும்போது, “நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்க கூடாது அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிபாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.
சில நகைச்சுவை நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் இன்று கோடிக்கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை. அந்த காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்த தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார்கள். இன்று தயாரிப்பாளரை அழவைத்து மக்களை சிரிக்க வைகிறார்கள்” என்று கொஞ்சம் காரமாகவே பேசினார்.
Comments are closed.