
என்னதான் இருக்கும் இந்தப்படத்தில். என போஸ்டர்களே ஆர்வத்தை தூண்டிய நிலையில் படத்தின் ட்ரெய்லரையாவது கண்ணில் காட்டினால் தாகத்துக்கு டம்ளர் தண்ணீர் குடித்த அளவுக்காவது திருப்திப்பட்டுக்கொள்ளலாம் என சூர்யா ரசிகர்கள் இத்தனை நாட்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த ’24’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரையும் இன்று வெளியிட்டே விட்டார்கள்…
சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தை விக்ரம் கே.குமார் இயக்கியுள்ளார். இவர்தான் தமிழில் அலை, யாவரும் நலம் ஆகிய படங்களையும் தெலுங்கில் இஷ்க், மனம் ஆகிய படங்களையும் இயக்கியவர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ட்ரெய்லரை பார்த்த வகையில் ஒரு கடிகாரம் கண்டுபிடிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கலாமோ என்கிற எண்ணம் தான் தோன்றியது. படத்தின் ஹைலைட் என்னவென்றால் இந்தப் படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று தான் ஆத்ரேயா என்கிற வில்லன் கதாபாத்திரம்.
இந்த இசைவெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் என யாரையும் அழைக்காமல் எளிமையாக நடத்தினார்கள்.. நாயகிகளில் ஒருவரான சமந்தாவை தவிர ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து உட்பட பலரும் வருகை தந்திருந்தனர்.. ஆச்சர்யமாக இந்தமுறை பேசும்போது சூர்யாவுக்கு ‘சைலண்ட் சகலகலா வல்லவன்’, ‘சைலண்ட் கில்லர்’ என பட்டம் சூட்டினார் தந்தை சிவகுமார்.
சூர்யா பேசியதில் மிக முக்கியமான நேர்மையான விஷயம் ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.. அதாவது “நான் சரியான படம் பண்ணினால் மட்டும் வெற்றிபெற வையுங்கள், தப்பான படத்தை நான் பண்ணினால் என்னையும் கூட ஆதரிக்காதிங்க.. அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால்தான், நாங்கள் நல்ல கதையை தேடிப்பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும்” என்றார்.. என் படம் நன்றாக இல்லை என்றால் ஓடவைக்க வேண்டாம் என சொல்வதற்கு ஒரு பெரிய மனது வேண்டும்..
ஹேட்ஸ் ஆப் சூர்யா.. !
Comments are closed.