சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருது பட்டியலில் நமது தமிழ் திரையுலகத்திற்கு ஏழு தேசிய விருதுகள் கிடைத்தன. இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதை பாராட்டும் மனம் கொண்டவரான சூர்யா, தேசிய விருது பெற்ற அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதோடு அவர்களுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் பாராட்டால் இன்ப அதிர்ச்சிக்குள்ளான விருது பெற்றவர்களும், சம்பந்தப்பட்ட படக்குழுவினரும் அவரது பெருந்தன்மையை எண்ணி வியந்ததுடன், அவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.