
தாமதமாகத்தான் ட்விட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார் சூர்யா. ஆனால் மகளிர்தினமான இன்று டிவிட்டரில் நுழைந்திருப்பது ஒரு சிறப்பு என்றால், அவரது சொந்த நிறுவன தயாரிப்பில், அவரது மனைவி ஜோதிகா நடித்துள்ள படத்தின் டைட்டிலையும் அறிவித்துள்ளது இன்னொரு சிறப்பு.
கிட்டத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப்பின் ஜோதிகா, மலையாளத்தில் வெளியான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இந்தப்படத்திற்கு ’36 வயதினிலே’ என இன்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
திருமணம் முடித்து, ஒரு டீனேஜ் பெண்ணுக்கு தாயான ஒரு பெண், தனது வாழ்க்கையை சமூகத்திற்கு பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்வதாக, கதை அமைந்துள்ள இந்தப்படத்திற்கு சரியான டைட்டிலை வைத்துள்ளதுடன், அதை மகளிர்தினமான இன்று அறிவித்துள்ளது மிகவும் பொருத்தமானதும் கூட.. அந்தவகையில் ட்விட்டரில் ஜென்டில்மேன் என்ட்ரி கொடுத்துள்ளார் சூர்யா.
Comments are closed.