“நான் நின்னே பிரேமிக்குன்னு.. நீ போ மோனே தினேஷா” ; கூட்டத்தை அதிரவைத்த சூர்யா..!

211

surya in kochi

சூர்யாவை பொறுத்தவரை கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் அவருக்கு ரசிகர் மன்றங்களும் லட்சக்கணக்கான மலையாள ரசிகர்களும் இருக்கின்றனர். அதனால் அவரது ஒவ்வொரு படம் ரிலீசாகும்போது, கேரளாவிலும் அதே தேதியில் ரிலீஸாவதால், நேரடியாக கேரளாவுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன-12ல், தனது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று சூர்யா கொச்சிக்கு சென்றிருந்தார்.

அங்கு ஏரளாமான ரசிகர்கள், மீடியா வரவேற்புடன் வெவேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட சூர்யா, படத்தின் ஹைலைட்டான அம்சங்களை பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேடையில் இருந்தவர்கள், மலையாள ரசிகர்களுக்காக ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அன்புடன் சூர்யாவுக்கு கோரிக்கை வைக்க, “நான் நின்னே பிரேமிக்குன்னு” என்கிற காதல் வசனத்தை பேசினார் சூர்யா. அதுமட்டுமல்ல, மோகன்லாலின் புகழ்பெற்ற வசனமான “நீ போ மோனே தினேஷா” மற்றும் ‘சவாரி கிரிகிரி’ ஆகிய வசனங்களை சூர்யா பேசியபோதும் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.

Comments are closed.