கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான ‘24’ படம் டெக்னிக்கலாகவும் கதை சொன்ன விதத்திலும் மிரட்டியது. டைம் மிஷின் என்கிற குழப்பமான கான்செப்ட் தான் என்றாலும் எந்தவித திகட்டலும் தெளிவாக திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு குழப்பம் வராத வகையில் படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் விக்ரம் குமார்..
படத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை ரசிகர்கள் மனதிற்குள் கடத்தியதில் ஒளிப்பதிவாளரின்பங்கு அதிகம்.. அதற்கு கெளரவம் சேர்க்கும் விதமாகத்தான் சிறந்த ஒளிப்பதிவிற்காக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் திருவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது..
அதுமட்டுமல்ல இந்த படத்தின் சிறந்த தயாரிப்பு நிர்வாகத்திற்காகவும் (அமித்ராய் & சுபத்ரா ராய்) தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.