சூர்யாவின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்த ‘கடுகு’..!

213

விஜய் மில்டன் இயக்கிய ‘கோலிசோடா’ படம் சூப்பர் ஹிட்டானது.. அடுத்ததாக விக்ரமை வைத்து இயக்கிய ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் பெரிய அளவில் போகவில்லை. இந்த சூழலில் சிறிய பட்ஜெட்டில் அவர் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் தான் ‘கடுகு’.. என்னதான் சிறப்பான படமாக எடுத்திருந்தாலும் அதன்மீதான ஒரு நம்பகத்தன்மை இருந்தால் தான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும்..

அந்த நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் ‘கடுகு’ படத்திற்கு அளித்துள்ளார் சூர்யா.. ஆம்.. சூர்யாவின் ‘2D என்டர்டைன்மெண்ட்’ தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம், இந்த ‘கடுகு’ படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருக்கிறது. பரத், டைரக்டர் ராஜகுமாரன், பரத்சீனி, சுபிக்ஷா, ராதிகா பிரசித்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படம் பின்னணி இசையே இல்லாமல் உருவாகியிருக்கிறது.

“எங்களின் கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த பலனாக தான் நாங்கள் இதை கருதுகிறோம். சூர்யா சாரோடு நாங்கள் கை கோர்த்து இருப்பது, பெருமையாக இருக்கின்றது. ‘சிங்கம் 3’ வாயிலாக எங்கள் ‘கடுகு’ திரைப்படம் விளம்பரப்படுத்தப்படுவது, எங்கள் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்” என்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

Comments are closed.