சில நேரங்களில் படத்தின் டைட்டிலுக்கும் வெளியில் நடைபெற்ற நிகழ்வுகள் ஏதாவது ஒன்றுக்கும் ஆச்சர்யமான தொடர்பு ஏற்பட்டு விடும்.. விக்னேஷ் சிவன் டைரக்சனில் சூர்யா நடித்துவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில், பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் புகழ்மிக்க வசனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று..
அதேசமயம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை தினத்தில் தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதிக்கும் படத்தின் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.. இந்த வருடம் இதே பொங்கல் பண்டிகை சமயத்தில் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னிறுத்தி மெரினாவில் போராட வரலாறு காணாத கூட்டம் தானா(க) சேர்ந்தது.. இந்த வருடம் பொங்கலுக்கும் இன்னொரு விதமாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ வருவதையும் பார்க்க போகிறோம்.

Comments are closed.