மோகன்லாலை அசத்திய சூர்யா ரசிகர்கள்…!

238

surya fans

கேரளாவில் அங்குள்ள மலையாள நடிகர்களின் அளவுக்கு நம் தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர்மன்றங்கள் இருக்கின்றன. அந்தவகையில் சூர்யாவுக்கும் கேரளா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் விரைவில் வெளியாக இருக்கும் மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்துக்கு வித்தியாசமான முறையில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சூர்யா தற்போது நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியானது இல்லையா..? அதில் இரண்டுவிதமான கெட்டப்புக்களில் இருக்கும் சூர்யாவின் படங்களை தலைகீழாக வைத்து புதுமையான முறையில் போஸ்டரை டிசைன் பண்ணியிருந்தார்கள். மோகன்லாலும் இந்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

அதனால் சூர்யா பட போஸ்டர் பாணியில் மோகன்லாலின் இரண்டு கெட்டப்புகளையும் இணைத்து புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் கேரள சூர்யா ரசிகர்கள்.

Comments are closed.