சுரேஷ்கோபி படம் ஓடும் தியேட்டரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..!

214

சில தினங்களுக்கு முன் “எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உண்மையான தகவலை கேட்டுபெற்று அதன் பின் கருத்து தெரிவிக்கவேண்டும்” என தைரியமாக கேரள முதல்வரை விமர்சித்தார் நடிகர் சுரேஷ்கோபி. 

இது கேரள அரசியல் அரங்கில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக இளைஞர் காங்கிரஸினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகள் அல்லவா..? எதிர்ப்பை காட்டாமல் இருப்பார்களா..?

சுரேஷ்கோபி நடித்து நேற்று ரிலீசான ‘அப்போதேகேறி’ என்ற படம் கோழிக்கோட்டில் ஓடும் தியேட்டருக்குச்சென்று சுரேஷ்கோபிக்கு எதிராக கோஷம் போட்டபடி படத்தை நிறுத்துமாறு போராட்டம் நடத்தியுள்ளார்கள் இளைஞர் காங்கிரஸார். பின்னர் போலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்களாம்.

ஒருகாலத்தில் இங்கே ரஜினியின் ‘பாபா’வுக்கும், விஜயகாந்த்தின் ‘கஜேந்திரா’வுக்கும் எதிராக நடந்த அரசியல் வன்முறைதான் இப்போது கேரளாவில் சுரேஷ்கோபியின் படத்திற்கும் நடக்கிறது..

Comments are closed.