‘ஜோக்கர்’ படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார்..!

243

rajini applaud joker

கடந்த வெள்ளியன்று எந்தவித பிரபல நட்சத்திரங்களும் இல்லாமல் ‘ஜோக்கர்’ என்கிற படம் வெளியானது.. குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகன் இந்தப்படத்தை இயக்கி இருந்ததாலும், எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்து இருந்ததாலும் இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது..

தவிர அரசியலை நையாண்டி செய்யும் விதமாக இதன் பாடல் ஒன்று தேர்தல் நேரத்தில் வெளியானதும் பரபரப்பை கிளப்பியது.. இப்போது படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.. சாமான்யனின் அரசியலை இதைவிட அழகாக சொல்ல முடியாது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப்படத்திற்கு எதிர்பாராத நபரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது.. ஆம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப்படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டர் படத்தில் ஜோக்கர் ஒரு பிரில்லியன்ட் படம் என பாராட்டி உள்ளார். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவையும் போனில் அழைத்த ரஜினிகாந்த், படம் குறித்து பல விஷயங்களை சிலாகித்து கூறியுள்ளார்.

Comments are closed.