சன்னி லியோனை வைத்து சரித்திரப்படம் இயக்கும் வடிவுடையான்..!

225

sunny leone

சௌகார்பேட்டை என்கிற ஹாரர் த்ரில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் பொட்டு என்கிற ஹாரர் படத்தை இயக்கி முடித்துவிட்ட இயக்குனர் வி.சி.வடிவுடையான், சரித்திர பின்னணியுள்ள பிரம்மாண்டமான தமிழ் படத்தை இயக்கவுள்ளார். இதில் பிரபல நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இது ஒரு சரித்திர பின்னணியுள்ள படமாகும். போர் காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் சன்னி லியோன் இதுவரை யாரும் காணாத அவதாரத்தில் தோன்றவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் அம்ரேஷ் கணேஷ். “அருமையான கதையம்சம் கொண்ட மிக பிரம்மாண்ட படம் இது. இது போன்ற ஒரு சரித்திர பின்னணியுள்ள படத்திற்கு இசையமைப்பது ஒரு சவாலான காரியமாகும். இப்பட பாடல்கள் ரெக்கார்டிங்கிற்கு வெளிநாடு செல்லவுள்ளோம். பண்டைய கால இசை கருவிகள் பலவற்றை பயன்படுத்தி புது விதமான ஒலியை கொண்டுவரவுள்ளேன்” என்கிறார் அம்ரேஷ் கணேஷ்.

Comments are closed.