‘வெள்ளிமூங்கா’ மலையாள ரீமேக்கில் சுந்தர்.சி..?

236


கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘வெள்ளிமூங்கா’ படத்திற்காக பிஜுமேனனை சோலோ ஹீரோவாக தேர்ந்தெடுத்தபோது வேண்டாம் இந்த ரிஸ்க் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அந்தப்படத்தின் இயக்குனர் ஜிபு ஜேக்கப்போ, தனது கதையின் ஹீரோ பாத்திரத்திற்கு பிஜுமேனன் தான் பொருத்தமானவர் என உறுதியாக நின்றார். பலன்… 3 கோடியில் எடுக்கப்பட்ட படம் 2௦ கோடி சம்பாதித்தது.

நாற்பது வயதாகியும் திருமணமாகாத, அரசியலில் எப்படியாவது முன்னேற துடிக்கின்ற, குறிப்பாக 22 வயது இளம்பெண்ணை அதுவும் தன கூட படித்த தோழியின் மகளை காதலிக்கின்ற அந்த கதாபாத்திரத்தில் பிஜுமேனன் அட்டகாசமாக பொருந்தியிருந்தார். இந்த கதையை தமிழில் ரீமேக் செய்தால் கூட்டிக்கழித்து பார்த்தால் கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதில் நடித்த பிஜுமேனன் கேரக்டருக்கு மாற்றாக நினைவில் வரவே இல்லை

ஆனால் இப்போது அதற்கு எதிர்பாராத ஒருவர் அந்த கேரக்டரில் நடிப்பதற்கான ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்தான் சுந்தர்.சி. வெள்ளிமூங்கா படத்தை பார்த்தவர்கள் ரீமேக்கில் சுந்தர்.சி நடித்தால் சரியாகத்தான் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.. ஆனால் இதில் சுந்தர்.சி நடிப்பு மட்டும் தான். நோ டைரக்சன்..

Comments are closed.