சந்தோஷத்திற்காக லீவு விட வைத்த சண்டை கலைஞர்கள்..!

253

shooting stop

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் தொழிலாளர் சம்மளேனமான பெப்சியின் எதேச்சதிகார போக்கிற்கு செக் வைத்து பூனைக்கு மணி கட்டினார் விஷால்.

இந்தநிலையில் வரும் ஆக-26ஆம் தேதி படப்பிடிப்பு ஏதுவும் நடத்த வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை பறந்திருக்கிறது. இது என்ன மீண்டும் ஒரு அதிரடிக்கு தயாராகிறாரா விஷால் என அதிர்ச்சியாகவேண்டாம்.. சந்தோஷத்தை கொண்டாடுவதற்குத்தான் இந்த லீவு விடப்பட்டுள்ளதாம்.

சண்டைக்கலைஞர்களின் சங்கம் ஆரம்பித்து 5௦வது வருடம் என்பதால் அதன் பொன்விழாவை வரும் ஆக-26ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாட உள்ளார்கள் சண்டைக்கலைஞர்கள் சங்கத்தினர். அதனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை வைக்க, அதை ஏற்று அன்றைய தினம் படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.