
தனது தந்தை சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கோச்சடையான் என்கிற அனிமேஷன் படத்தை இயக்கி டைரக்சனில் அடியெடுத்து வைத்தார் சௌந்தர்யா ரஜினி. அதன்பின் அடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டாமல் இருந்துவந்தார்.. கடந்த சில நாட்களுக்கு முன் தனது கணவருடனான மணமுறிவையும் அறிவித்தார்..
அதன்பின் சினிமாவில் அவர் தீவிர கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்ற மாதிரியே ரஜினியை வைத்து கபாலி’ படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவே, சௌந்தர்யாவை தனது பேனரில் ஒரு படம் இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட சௌந்தர்யாவும் தற்போது புதிய படத்துக்கான நடிகர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். இந்தப்படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.
Comments are closed.