‘நர்ஸ்’ஆக மாறினார் சிவகார்த்திகேயன்..!

219

remo siva look
‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ‘ரெமோ’ என்கிற படத்துக்காக இணைந்து நடிக்கிறார்கள் இல்லையா..? பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஹைலைட்டான செய்தியே சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பதுதான்.

நேற்று இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள்.. நர்ஸ் வேடத்தில் அழகிய பெண்ணாக சிவகார்த்திகேயனை பார்க்கும்போது ‘அட’ என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை. சொல்லப்போனால் பிரசாந்த், விக்ரமை தொடர்ந்து பெண் வேடம் கச்சிதமாக பொருந்தியிருப்பது சிவகார்த்திகேயனுக்குத்தான் என்றே சொல்லலாம்.

Comments are closed.