
மதுரை ஜெயண்ட் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தயாநிதி அழகிரி தனது அணியை விளம்பரப்படுத்தும் விதமாக அதன் லோகோ மற்றும் தீம் பாடல் ஆகியவற்றை சமீபத்தில் வெளியிட்டார். தமன் இசை அமைத்துள்ள ஆட்டைக்கு ரெடியா என்ற இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் பிரபல கிரிக்கெட் வீர்ர் ஷேவாக் மற்றும் சிம்பு, அனிருத், தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேசிய சிம்பு, தான் சிறுவயதாக இருந்த போது, கோவையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து சொல்லாமல், கொள்ளாமல் இரயிலில் டிக்கெட் இன்றி கோவைக்கு பயணித்த கதையை கூறினார். மெத்தையிலேயே படுத்து உறங்கிய சிம்புவுக்கு அங்கே தரையில் படுத்து உறங்குவது கடினமாக இருந்ததாம்.
அப்போது உடனிருந்து நண்பர்கள் அவர்களது தலையணைகளை மெத்தையாக்கி அதில் சிம்புவை உறங்கச் செய்தனராம். அப்படியும் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத்துதான் சோகம். அதைவிட வீட்டிற்கு திரும்பி வந்ததும் அவரது தந்தை அவரை பிரித்து மேய்ந்தார் என்பது இன்னொரு சோகம்.
Comments are closed.