
வாலு படம் நாளை ரிலீஸாவதால், நீண்ட நாட்கள் கழித்து மங்களகரமான நிகழ்வு நடப்பதுபோல சிம்புவின் ஏரியாவே போர்க்கோலம் முடிந்து திருவிழாக்கோலத்துக்கு மாறியுள்ளது.. அஜித் மட்டுமல்லாமல், இந்தப்படத்திற்கு உதவியதன் மூலம் விஜய் ரசிகர்களும் சிம்பு படத்திற்கு ஆதரவு தர தயாராகி வருகிறார்கள்..
இந்த நிலையில் சிம்புவின் ‘வாலு’ ரிலீஸ் தேதி உறுதியான செய்தி அறிந்ததும் முதல் ஆளாக படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இருந்து போனில் வாழ்த்து செய்தி பறந்து வந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களின் ஆதரவும் ‘வாலு’வுக்கு கிடைக்கும் சாதகமான சூழல் உறுவாகியுள்ளது.
Comments are closed.