
சந்தானத்தை ஒரு நடிகராக, தான் நடித்து இயக்கிய மன்மதன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தவர் சிம்பு தான். அதனால் தான் கடந்த இரண்டு வருடங்களாக எந்த விழாக்களிலும் கலந்துகொள்ளாத சிம்பு, இன்று சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ விழாவில் கலந்துகொண்டு வாழ்த்த வந்திருந்தார். அவர் கடைசியாக கலந்துகொண்டது கூட சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட இசைவெளியீட்டு விழாவில் தான்.
“சந்தானத்திடம் திறமை இருந்தது.. அதை சரியாக உணர்ந்து அதை சினிமாவில் வெளிக்கொண்டுவர உதவிய முதல் ஆள்” என்பதில் தான் பெருமைப்படுவதாக கூறி சந்தானத்தின் வளர்ச்சியை பாராட்டி பேசிய சிம்பு அப்படியே தன்னை பற்றி வெளியாகும் செய்திகள் குறித்து உருக்கமாகவும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
“கிட்டத்தட்ட எல்லாமே என்னை விட்டு போயிருச்சு.. நான் காதலிச்ச பொண்ணு கூட என்ன விட்டு போயிட்டா.. பத்திரிகைல கூட நான் ஆன்மீகவாதி ஆகிட்டேன்னு செய்தி எல்லாம் வந்துச்சு.. நான் கடவுளைத்தேடித்தானே போனேன் பிகரை தேடி போகலையே.. படம் இல்லாம வருமானம் கூட இல்ல. இப்ப செலவுக்கு அம்மாகிட்ட காசு கேட்டு வாங்கி செலவு பண்றேன். ஆனாலும் என்கிட்டே உயிர் மிச்சம் இருக்கும்.. திரும்பவும் வருவேன்” என்றார் உணர்ச்சி பெருக்குடன்.
Comments are closed.