டிவிட்டரில் இருந்து விலகுகிறார் சிம்பு..!

196

பொதுவாக நடிகர்கள் தங்களது ரசிகர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கு, அதாவது தங்களை பற்றிய அப்டேட் விபரங்களை தெரிவிப்பதற்கு ட்விட்டர் ரொம்பவே வசதியாக இருந்தது.. அந்த வகையில் ட்விட்டரை பயன்படுத்துவதில் முதல் ஆளாக இருந்த சிம்பு, தற்போது டிவிட்டரில் இருந்து விலக முடிவெடுத்து அதை ரசிகர்களுக்கும் அறிவித்துள்ளார்.

காரணம் வாலு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வருகிறார். அதனால் டிவிட்டருக்கு நேரம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்படுவாதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம். இருந்தாலும் சிம்புவின் ரசிகர்மன்ற நிர்வாகிகளால் அவரது ட்விட்டர் பக்கம் தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

Comments are closed.