
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது பலரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம் சுமத்தினார்கள்.. நாசர் தலைமையிலான புதிய அணி தற்போது பொறுப்புக்கு வந்ததும் உறுப்பினர் பட்டியலை சீரமைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
அதன் முதற்கட்டமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் முழுவிபர தகவல் சேகரிப்பு நிகழ்வான ‘குருதட்சணை’ விழா நேற்று துவங்கியது. விழாவை சீனியர்களான நடிகர் சிவகுமாரும் நடிகை சச்சுவும் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
முதற்கட்டமாக நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பு திறனை ஆராயும் வகையில் நடிப்பு திறனை ஆராயும் திட்டம் சென்னையில் உள்ள உறுப்பினர்களுக்காக இன்று துவங்கியது. மேலும் இது ஒவ்வொரு கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெறும்.
மேலும் சிவகுமார் சங்கத்தின் ட்ரெஸ்டுக்க்காக ரூபாய் 25,000 வழங்கியுள்ளார். “வேலை ஏதும் இல்லாத நடிகர் சங்க உறுப்பினர் ஆன நானே, நான் உறுப்பினராக இருக்கும் சங்கத்துக்கு நிதி அளிக்கும்போது, மற்ற நடிகர்களும் நிச்சயம் அளிக்கலாம் என்றும சிவகுமார் கூறினார்.
நடிகர் சங்க உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் தகவல் சேகரிப்பதற்கும், நடிகர் சங்க உறுப்பினர்களின் நடிப்பை திறனாய்வதற்கும், ஓய்வூதியும் வழங்குவதற்கான தகவல் சேகரிப்பதற்காகவும், சங்க உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் நடத்துவதற்காகவும் தான் இந்த குருதட்சணைனை திட்டம் துவங்கப்பட்டுள்ளது..
Comments are closed.