
தெலுங்கில் இருந்து தமிழ்சினிமாவுக்கு இடம்பெயர்ந்து, ‘உனக்கு 20 எனக்கு பதினெட்டு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை உரசிய ஸ்ரேயா, தமிழில் தனது நான்காவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரேயா மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல.. மற்ற நடிகைகளிடம் இல்லாத ஸ்ரேயாவின் இன்னொரு சாதனை கிட்டத்தட்ட 15 படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதுதான். ஆனால் அதுவே அவர்மீது கெஸ்ட் ரோலில் நடிப்பவர் என்கிற முத்திரையை அழுத்தமாக பதித்துவிட்டதால் இங்கே தமிழில் அவருக்கு சுத்தமாகவே வாய்ப்புகள் இல்லை. கிட்டத்தட்ட ரிட்டையர்மென்ட் ஸ்டேஜில் தான் இருக்கிறார் ஸ்ரேயா.
ஆனால் இப்போது நொந்துபோன அவரது மனதிற்கு இதமளிக்கும் விதமாக இந்திப்பட வாய்ப்பு ஒன்று தேடிவந்துள்ளது. ஆம்.. மலையாளத்தில் ஹிட்டாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என சுற்றி வந்த ‘திரிஷ்யம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு தாயாக நடிக்கிறார் ஸ்ரேயா என்பது கவனிக்கத்தக்கது..
Comments are closed.