“இனியாவை ஆடவைத்திருக்கலாமே” – ஜெயம் ரவியின் தந்தை ஆதங்கம்..!

253

பார்க்கிற எல்லா பெண்களையும் தன் காதல் வலையில் வீழ்த்திவிட்டதாக சில விடலைகள் சலம்பல் பண்ணுவார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட ஒருத்தனின் வாழ்க்கையில், அவன் அவிழ்த்துவிட்ட பொய்களே எப்படி அவனுக்கு எதிராக வந்து நிற்கின்றன என்பது தான் ‘காதல் சொல்ல நேரமில்லை’ படமாக தற்போது உருவாகி இருக்கிறது.

இந்தப்படத்தில் உதய்குமார் அறிமுக நாயகனாக நடிக்க, கதாநாயகியாக இனியா நடிக்கிறார். கஞ்சாகருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் ஸ்ரீநிவாசன். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, செயலாளார் டி.சிவா, எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

எடிட்டர் மோகன் பேசும்போது, “இனியா நன்றாக நடனம் ஆடக்கூடிய திறமை வாய்ந்தவர். அவருக்கு ஒரு பாடல் காட்சியிலாவது நடனம் ஆடும் வாய்ப்பை தந்திருக்கலாம்.. தவிர கதாநாயகனையே ரொம்பவும் போகஸ் பண்ணியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.. இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்களில் ரசிகர்களுக்கு, நன்கு அறிமுகமானவர் நடிக்கும்போது அவர்களை மேக்சிமம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். ஜெயம் ரவியின் தந்தை தான் எடிட்டர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.