“சாதித்து காட்டியுள்ளார்” – சௌந்தர்யாவை பாராட்டிய சிம்பு..!

208


சில தினங்களுக்கு முன் ‘வாலு’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சிம்பு நேராக போனது ‘கோச்சடையான்’ படத்தை பார்க்கத்தான்.. அவர் தீவிரமான அஜித் ரசிகர் என்பது தெரிந்தாலும் அவர் முதலில் சூப்பர்ஸ்டாரின் ரசிகரும் கூட.. ரஜினியை தலைவர் என்றுதான் இப்போதும் குறிப்பிடுவார் சிம்பு.

‘கோச்சடையான்’ பார்த்துவிட்டுவந்த சிம்பு தனது இணையதள பக்கத்தில், “ஹாலிவுட்டுடன் ஒப்பிடும்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்துள்ளது மிகப்பெரிய சாதனைதான். ஒரு சில டெக்னிகல் குறைபாடுகள் இருந்தலும் இனிவரும் காலங்களில் சௌந்தர்யா அதை சரியாக முன்னெடுத்துச் செல்வார்.

அதிலும் கே.எஸ்.ரவிகுமாரின் கதை, ரஹ்மானின் இசை, ஆண்டனியின் படத்தொகுப்பு எல்லாமே கச்சிதம். குறிப்பாக வசன்ங்கள் சூப்பரோ சூப்பர். மொத்தத்தில் கோச்சடையானும் தலைவரும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள். படத்தை பார்த்து மகிழ்ச்சி அடையும் அதேவேளையில் சௌந்தர்யாவை பார்த்து பெருமைப்படுகிறேன்” என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Comments are closed.